தமிழக செய்திகள்

யானை தந்தம் கடத்திய 3 பேர் கைது

குடியாத்தம்- வேலூர் சாலையில் வனத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

பைக், யானை தந்தங்களை பறிமுதல் செய்து குடியாத்தம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள திருமலை வனப்பகுதயில் தந்தத்தை வாங்கி வந்ததாக தெரிவித்தனர்.

குடியாத்தம்- வேலூர் சாலையில் வனத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பொழுது ஒரே பைக்கில் 3 பேர் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் 2 யானை தந்தங்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

விசாரணை

விசாரணையில் அவர்கள் லத்தேரி பள்ளத்தூர் பகுதியை சேர்ந்த திருவேங்கடம் (வயது38) அணைக்கட்டு பகுதியை சேர்ந்த முனிசாமி (52) கோவிந்தராஜ் (38) என தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர்.

குடியாத்தம் வனத்துறை

அவர்களிடமிருந்து பைக், யானை தந்தங்களை பறிமுதல் செய்து குடியாத்தம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள திருமலை வனப்பகுதயில் தந்தத்தை வாங்கி வந்ததாக தெரிவித்தனர்.

இதில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT