பரங்கிமலை இன்ஸ்பெக்டர் முகமது புஹாரி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு நீதிபதி என்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி புகாரியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவதாக மிரட்டி சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் அகில் என்பவரிடம் ரூ.40 லட்சம் பணம் பறித்ததாக பரங்கிமலை இன்ஸ்பெக்டர் முகமது புகாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்த சீனிவாசன் ஆகியோரை யானைக்கவுனி போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில், ஏற்கெனவே ஜாமின் கோரி முகமது புகாரி 2 முறை தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்திருந்தது.
இந்தநிலையில், முகமது புஹாரி ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முகமது புகாரியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.