தமிழக செய்திகள்

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீரமூர்த்தி குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.

தூத்துக்குடி சிப்காட் காவல் சரகம் கே.டி.சி. நகர் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் வீரமூர்த்தி (வயது 70). ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்.

நகை கொள்ளை

இவர் கடந்த 26 -ந் தேதி குடும்பத்தினருடன் பரமன்குறிச்சியில் உள்ள தங்களது குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார்.

நேற்று மாலை அவர் மீண்டும் வீடு திரும்பிய போது அவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டின் உள் அறையில் இருந்த 3 பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த 14 பவுன் தங்க நகை, 750 கிராம் வெள்ளி, ரூ.80 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து உடனடியாக அவர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிப்காட் இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவம் நடைபெற்ற வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

போலீசார் வழக்குப்பதிவு

மேலும், சம்பவ இடத்திற்கு தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. வீரமூர்த்தி குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT