தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் மீனவர் குத்திக்கொலை- நண்பர் வெறிச்செயல்

தூத்துக்குடி வடபாகம் போலீசார் செந்தில்வேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியிலேயே பழனி உயிரிழந்தார்.

தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் காலனியை சேர்ந்தவர் பழனி (வயது 45). சங்கு குளி மீனவர்.

இவரும், அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரான செந்தில்வேல்(35) என்பவரும் இன்று காலை கனவாய் மீன்பிடி சங்கம் பகுதியில் வைத்து மது குடித்துள்ளனர்.

தகராறு

அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது ஆவே சமடைந்த செந்தில்குமார் கத்தியால் சரமாரியாக குத்தியதில் பழனி பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியிலேயே பழனி உயிரிழந்தார்.

போலீசார்

இது குறித்த தகவலறிந்த தூத்துக்குடி வடபாகம் போலீசார் செந்தில்வேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT