உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின. 
தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் கனமழையால் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கியது

தூத்துக்குடி கடலோர பகுதிகளில் உள்ள உப்பளங்களில் பெய்த கனமழையின் காரணமாக உப்பளங்கள் மழை நீரில் மூழ்கியது.

தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய முள்ளக்காடு பகுதியில் அடுத்த ஒரு வாரம் மழை இல்லாமல் இருந்தால் உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்கும் என்றும் கூறுகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கோடையை மிஞ்சும் வகையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று நள்ளிரவு ஒரு மணி முதல் இன்று காலை வரை மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தால் குளங்கள் அனைத்தும் வறண்டு, விவசாயிகள் வேளாண்மை பணிகளில் ஈடுபட முடியாமல் பாபநாசம் அணையில் இருந்து தாமிரபரணி தண்ணீரை முழுமையாக திறந்து விட வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

விவசாயிகள்

இந்நிலையில் இந்த மழை சுமார் 2000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழைக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில் வயல்வெளி பகுதிகளில் தூறல் மழையாக நின்று போனது. ஆனால் தூத்துக்குடி கடலோர பகுதிகளில் உள்ள உப்பளங்களில் பெய்த கனமழையின் காரணமாக உப்பளங்கள் மழை நீரில் மூழ்கியது, இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.

தூத்துக்குடி

பழையகாயல், புல்லா வெளி உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க ஒரு மாத காலம் ஆகும் என்று உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய முள்ளக்காடு பகுதியில் அடுத்த ஒரு வாரம் மழை இல்லாமல் இருந்தால் உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்கும் என்றும் கூறுகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

தூத்துக்குடி-5.520, ஸ்ரீவைகுண்டம்-1.10, திருச்செந்தூர்- 5, காயல்பட்டினம்- 12, குலசேகரன்பட்டினம்- 4, வைப்பார்- 12, ஓட்டப்பிடாரம்- 4, மணியாச்சி -1, கீழஅரசரடி -7.

SCROLL FOR NEXT