மீனவ கிராமங்களில் வழக்கமாக நடைபெறும் இப்போட்டி சமீபத்தில் தொண்டி பகுதியில் பாய்மர படகுப்போட்டியை மையமாகக்கொண்டு படப் பிடிப்பு நடத்தப்பட்டு திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சூரி நடிப்பில் வெளியான மண்டாடி என்ற திரைப்படத்தால் இப்போட்டியான திரை உலகில் பிரபலமாக பேசப்பட்டதால் இப்போட்டியைக் காண அதிக அளவில் பார்வையாளர்கள் வந்ததை காண முடிந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கடலோர கிராமமான முள்ளி முனையில் பத்ரகாளி அம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டியில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து 25-க்கும் மேற்பட்ட படகுகள் கலந்து கொண்டன. 10 கடல் மைல் தொலைவு எல்லையாக நிர்ணயம் செய்யப்பட்டு போட்டி தொடங்கியது. ஒவ்வொரு படகிற்கும் 7 நபர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். போட்டியை முறைப்படி கிராம பெரியவர்கள் தொடங்கி வைத்தனர்.
தொடக்கம் முதல் போட்டி விறுவிறுப்பாக நடந்தது. இதில் கலந்து கொண்ட அணியினர் தங்களது படகுகளை காற்றின் வேகத்தில் மற்ற படகுகளை ஒன்றையொன்று முந்தி சென்றதும், படகை காற்றின் திசைக்கு ஏற்றவாறு வீரர்கள் பாய் மரத்தை திருப்பி அமைத்து வெற்றி பெற முனைப்புடன் செயல்பட்டனர்.
மீனவ கிராமங்களில் வழக்கமாக நடைபெறும் இப்போட்டி சமீபத்தில் தொண்டி பகுதியில் பாய்மர படகுப்போட்டியை மையமாகக்கொண்டு படப் பிடிப்பு நடத்தப்பட்டு திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சூரி நடிப்பில் வெளியான மண்டாடி என்ற திரைப்படத்தால் இப்போட்டியான திரை உலகில் பிரபலமாக பேசப்பட்டதால் இப்போட்டியைக் காண அதிக அளவில் பார்வையாளர்கள் வந்ததை காண முடிந்தது.
முடிவில் இப்போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பையும் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.