தமிழக செய்திகள்

‘இது வெறும் பூச்சித் தொல்லை அல்ல; நாடு ஏதோ சொல்ல முயற்சிக்கிறது’ - கனிமொழி

நான்கு நாட்களில் பதினைந்து மில்லியன் இளைஞர்கள் பதிவு செய்கிறார்கள் என்றால், அது ஒரு பூச்சித் தொல்லை அல்ல

இந்தியாவில் ஆளும் பாஜக மற்றும் காங்கிஸிற்கு இணையாக இணையத்தில் உருவெடுத்துள்ள ஒரு புதிய கட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி.

நாட்டின் தற்போதைய ஆட்சி முறை, வேலையின்மை மற்றும் அதிகார அமைப்புகளுக்கு எதிராக இளைஞர்கள் தங்களது விரக்தியையும், கோபத்தையும் வெளிப்படுத்தும் டிஜிட்டல் தளமாக இது உருவெடுத்துள்ளது.

இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;

“நான்கு நாட்களில் பதினைந்து மில்லியன் இளைஞர்கள் பதிவு செய்கிறார்கள் என்றால், அது ஒரு பூச்சித் தொல்லை அல்ல. இதன்மூலம் நாடு ஏதோ ஒன்றைச் சொல்ல முயல்கிறது. நாம் அதைக் கவனிக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.