சென்னை:
திருவான்மியூர் பறக்கும் ரெயில் நிலையத்தில் நேற்று அதிகாலையில் துப்பாக்கி முனையில் ரூ.1.32 லட்சத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில், ரெயில்வே ஊழியரான டீக்காராம் திட்டமிட்டே தனது மனைவி சரஸ்வதியை வைத்து இந்த கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. போலீஸ் பிடி இறுகியதால் டீக்காராம் நடந்த சம்பவங்களை அப்படியே போலீசாரிடம் கக்கினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கொள்ளை நாடகம் ஆடிய டீக்கா ராமன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரெயில்வே மண்டல மேலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.