தமிழக செய்திகள்

திருவள்ளூர்: அமோனியா வாயுக்கசிவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

60க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயுக்கசி ஏற்பட்டது.

இந்நிலையில் 60க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப்டுகிறது.

குறிப்பாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 10 பேரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 7 பேரும் வேல்ஸ் மருத்துவமனையில் 28 பேரும் வெங்கடேஷ்வரா மருத்துவமனையில் 20 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இருப்பினும் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் மேலும் ஒரு பெண் இன்று உயிரிழந்தார். அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்தார். மேலும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத்திணறல், கண் மற்றும் சுவாசக்குழாய் எரிச்சல், இருமல், மார்பு அசௌகரியம் மற்றும் பல்வேறு அளவிலான சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டது. வாயுக்கசிவுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT