திருத்தணி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் வெண்ணிலா. இவரது மகன்கள் சுரேஷ் (வயது15), தேவா, சூர்யா. கணவரை இழந்த வெண்ணிலா தனது 3 மகன்களுடன் முருக்கம்பட்டு பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் தங்கி வேலைபார்த்து வந்தார்.
கோழிப்பண்ணையை திருத்தணி, எம்.ஜி.ஆர். நகர் பகுதி சேர்ந்தவர் பாலமுருகன் என்பவர் நடத்தி வந்தார். சிறுவன் சுரேஷ் பண்ணையில் உள்ள கோழிகள், ஆடுகளை பராமரித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆடுகளை சரிவர மேய்க்காததாலும், கோழிகளை சரிவராக பராமரிக்காததால் குறைந்ததாலும் ஆத்திரம் அடைந்த பாலமுருகன் சிறுவன் சுரேசை அடித்து கொன்று உடலை கோழிப்பண்ைண வளாகத்திற்கள்ளேயே புதைத்தனர்.
மேலும் இதுகுறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறி வெண்ணிலாவையும் அவரது மற்ற மகன்களையும் மிரட்டி கோழிப்பண்ணையிலேயே சிறை வைத்தனர். இதற்கு உடந்தையாக பாலமுருகனின் மனைவி புவனேஸ்வரி, நண்பர் வினோத் இருந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோழிப்பண்ணையில் இருந்து தப்பி வந்த வெண்ணிலா தனது மகன் கொன்று புதைக்கப்பட்டது தொடர்பாக திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் கோழிப்பண்ணைக்கு சென்று பார்த்த போது சிறுவன் சுரேஷ் கொன்று புதைக்கப்பட்டு யாருக்கும் சந்தேகம் வராத வகையில் சிமெண்ட் சமாதி கட்டி வைத்து இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கோழிப்பண்ணை உரிமையாளர் பாலமுருகன் அவரது மனைவி புவனா (36), நண்பர் வினோத் ஆகிய 3பேரை கைது செய்தனர். நேற்று மதியம் சிறுவன் சுரேசின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து அவரது தாயிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. கைதான கணவன்-மனைவி உள்பட 3 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
கோழிப்பண்ணையை பராமரிக்க ஆட்கள் தேவை என்று பாலமுருகன் நண்பரான வினோத்திடம் கூறி உள்ளார். இதையடுத்து அவர் தனது உறவினரான வெண்ணிலாவை அறிமுகப்படுத்தி வேலைக்கு சேர்த்து விட்டதாக தெரிகிறது. இதையடுத்து வெண்ணிலா தனது மகன் சுரேஷ் உள்ளிட்ட 3 மகன்களுடன் கோழிப்பண்ணையிேலயே தங்கி வேலைபார்த்தார்.
சிறுவன் சுரேஷ் கோழிகளை பராமரித்து வந்தபோது சரிவர வேலை செய்யாததால் கோழிகள் எண்ணிக்கை குறைந்து வந்தாக கூறப்படுகிறது. மேலும் ஆடுகளை சரியாக மேய்க்காததால் பக்கத்து நிலத்திற்கு சென்றதால் தகராறும் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கோழிப்பண்ணையின் உரிமையாளர் பாலமுருகன் 4 மாதங்களுக்கு முன்பு தாயார் வெண்ணிலா கண் எதிரிலேயே அவரது மகன் சுரேசை சரமாரியாக தாக்கி உள்ளார்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனதால் உடலை கோழிபண்ணை வளாகத்தில் புதைத்து சமாதி கட்டி இருப்பது தெரிந்தது. கொலையை மறைக்க அவரது மனைவி புவனேஸ்வரி மற்றும் நண்பர் வினோத் உதவி உள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, சிறுவன் சுரேஷ் கொலை குறித்து மருத்துவக் குழுவினர் முழுமையான அறிக்கை பெற்று உரியநடவடிக்கை எடுக்கப்படும். வெண்ணிலா 4 மாதங்களுக்கு பிறகு புகார் செய்துள்ளார். அதன்படி கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். வழக்கில் தொடர்புகள் குறித்து சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றனர்.