தமிழக செய்திகள்

திருப்பரங்குன்ற தூண் விவகாரம்: அரசின் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை என்ன? - ஸ்டாலின்

தீபத்தூணில் ஒருமுறை மட்டும் நிபந்தனைகளுடன் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கார்த்திகை தீபத் திருநாளன நவ.24 அன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஒருமுறை மட்டும் நிபந்தனைகளுடன் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு

நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வானது உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.

அதன்படி திருப்பரங்குன்ற தீபத்தூணில் தீப ஏற்றும் அனுமதி நடப்பு கார்த்திகை தீபத்திற்கு மட்டுமே பொருந்தும்; இதை நிரந்தர வழக்கமாகவோ அல்லது எதிர்கால உரிமையாகவோ கோர முடியாது என்று தெரிவித்துள்ளது.

தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனையுடன் தீபம் ஏற்ற அனுமதி

கோவில் நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்றும் பொதுமக்கள், முழக்கங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த தீபத்தூண் விவகாரத்தில் அரசின் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை என்ன என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை குறித்து விளக்க வேண்டும்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசு கடுமையாகப் போராடி, தமிழ்நாட்டின் அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது.

த.வெ.க. அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.

என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT