தமிழக செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் - தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தனி நபர்கள் சிலர் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டிருந்த தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை

மாலை மலர்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கடந்தாண்டு திருக்​கார்த்​திகை நாளில் தீபம் ஏற்ற வேண்​டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை அரசு நிறைவேற்றாத நிலையில், மதுரை மாவட்ட ஆட்​சி​யர், மாநகர காவல் ஆணை​யர், இணை ஆணை​யர், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலு​வலர் ஆகியோ​ருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இம்மனுக்கள் மீதும் தனி நீதிபதி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.

இந்த மனுக்​கள் நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்​வில் இன்று மீண்டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்போது, தனி நபர்கள் சிலர் தீபம் ஏற்றலாம் என்ற உத்தரவு உட்பட தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுகளுக்கு இடைக்கால தடைவிதித்த இரு நீதிபதிகள் அமர்வு, வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மேலும் தேவஸ்தானமே மலையில் பூஜை செய்து இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாமே என்றும், இந்த வழக்கில் அரசு பிடிவாதமாக இருக்கக்கூடாது என்றும், சாதாரண விஷயத்தை இவ்வளவு பெரிதாக்குவது ஏன்? இந்த ஒரு விஷயத்திற்காக எத்தனை நபர்களின் காலம் வீணாகிறது? நீதிமன்ற நேரமும் வீணாகிறது எனக் குறிப்பிட்டனர்.