தமிழக செய்திகள்

திருப்பரங்குன்றம் விவகாரம்: முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி உட்பட 10 பேர் கைது

நாகர்கோவிலில் தனது வீட்டில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தியை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.

எம்.ஆர்.காந்தி மற்றும் நாஞ்சில் ராஜா ஆகிய இருவரையும் வடசேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். குமரி மாவட்டம் முழுவதும் பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 10 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை மற்றும் இந்து அமைப்புகளின் போராட்ட அறிவிப்புகளை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக குமரி மாவட்டத்தில் பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளின் நடமாட்டத்தை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை நாகர்கோவிலில் தனது வீட்டில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தியை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.

கைது

கைது செய்யப்பட்ட அவர் நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதேபோல் வடசேரி பகுதியை சேர்ந்த இந்து கூட்டமைப்பு மாவட்ட அமைப்பாளர் நாஞ்சில் ராஜாவையும் போலீசார் இன்று காலை கைது செய்து, வடசேரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

எம்.ஆர்.காந்தி மற்றும் நாஞ்சில் ராஜா ஆகிய இருவரையும் வடசேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். குமரி மாவட்டம் முழுவதும் பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 10 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் மதுரைக்கு செல்வதை தடுக்கும் விதமாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ேமலும் குமரி மாவட்டத்தின் முக்கிய எல்லை பகுதிகளான ஆரல்வாய்மொழி மற்றும் அஞ்சுகிராமம் ஆகிய இடங்களில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் குமரி மாவட்டத்தை விட்டு பா.ஜ.க.-இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வெளியே செல்வதை தடுக்கும் வகையில், அவ்வழியாக செல்லும் வாகனங்களை சோதனை நடத்தி கண்காணித்து வருகின்றனர். மேலும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

SCROLL FOR NEXT