கோவை, சூளூரில் 10 வயது சிறுமி இருவரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.குளத்தில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், சிறுமியின் பக்கத்து வீட்டில் இருந்த இருவரே இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த அதிர்ச்சி சம்பவம் தொர்பாக அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடக்கும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர், தலைவர் தொல் திருமாவளவன் கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் காணொளியில் சந்தித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர், "கோவை சூலூர் அருகே பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்ட 10வயது சிறுமியின் பெற்றோரை காணொளியில் சந்தித்து ஆறுதல் கூறினேன்!
இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்கு, பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பதற்கு அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்!
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்," என குறிப்பிட்டுள்ளார்.