திருமாவளவன் 
தமிழக செய்திகள்

சமூகநீதி கணக்கெடுப்பை வரவேற்கிறோம் - திருமாவளவன்

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறுகிறது

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு எதிராக நடைபெறுகின்ற ஆர்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சிகள் சார்பாக தமிழ்நாடு, கேரளா ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து திரளானவர்கள் பங்கேற்கிறோம் என்று திருமாவளவன் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சமூக நீதி கணக்கெடுப்புக்கு தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் அளித்ததை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. மேலும் எங்கள் கட்சியின் உயர்நிலை குழு கூட்டத்தில் ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறுகிறது அதற்காக செல்கிறேன்.

வருகிற 1-ந் தேதி ராம்லீலா மைதானத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு எதிராக நடைபெறுகின்ற ஆர்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சிகள் சார்பாக தமிழ்நாடு, கேரளா ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து திரளானவர்கள் பங்கேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT