தமிழக செய்திகள்

த.வெ.க.விற்கு எதிராக நாங்கள் பிரசாரம் மேற்கொள்ளவில்லை- திருமாவளவன்

தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக வீழ்த்துவது எங்கள் இலக்கு. அதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அண்ணா அறிவாலயத்திற்கு தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் வருகை தருகின்றனர்.

அந்த வகையில், திருமாவளவன், வீரபாண்டியன், சண்முகம், சுதீஷ், வைகோ உள்ளிட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் மு.க.ஸ்டாலினை சந்திக்கவில்லை.

இதன்பின் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது, த.வெ.க. முதலில் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக சொல்லட்டும். தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை தமிழ்நாட்டு மக்கள் முற்றிலும் நிராகரித்து விட்டனர். தேர்தலில் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற எங்களது நோக்கம் நிறைவேறியுள்ளதாக சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கூறினார்.

தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக வீழ்த்துவது எங்கள் இலக்கு. அதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். த.வெ.க.விற்கு எதிராக நாங்கள் பிரசாரம் மேற்கொள்ளவில்லை, எங்கள் இலக்கு அதிமுக- பாஜகவை வீழ்த்துவது தான் என்றார்.