தமிழக செய்திகள்

சென்னை மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுவது அவசியமானது: திருமாவளவன்

எவ்வளவு நிதி செலவழிக்கப்பட்டு இருக்கிறது என்பதை பொதுமக்களின் பார்வைக்கு தெரியப்படுத்துவது அவசியமானது தான்.அ.தி.மு.க.வினர் மத்திய அரசுடன் நட்புறவுடன் இருக்கிறார்கள்.

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவது அவசியம் என்றால் வெளியிடலாம். என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. எவ்வளவு நிதி செலவழிக்கப்பட்டு இருக்கிறது என்பதை பொதுமக்களின் பார்வைக்கு தெரியப்படுத்துவது அவசியமானது தான்.

மத்திய அரசு ரூ.1,000 கோடி மட்டுமே பேரிடர் நிவாரண நிதியாக வழங்கி இருக்கிறது. தமிழக முதலமைச்சர் ரூ.5,000 கோடி வேண்டும் என்று கோரி இருந்தார். ஆனால் அதில் ஐந்தில் ஒரு பங்கு என்கிற வகையில் ரூ.1,000 கோடி மட்டுமே ஒதுக்க முன் வந்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

அ.தி.மு.க.வினர் மத்திய அரசுடன் நட்புறவுடன் இருக்கிறார்கள். அவர்கள் மத்திய அரசு அல்லது பிரதமரை வலியுறுத்தி ரூ.5,000 கோடி பெறுவதற்கு ஆதரவு தர முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT