இசையமைப்பாளர் தேவாவின் மறைவு தமிழ் சமூகத்திற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும் என திருமாவளவன் தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி., திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவாவின் மறைவு மிகுந்த துயரத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரையைப் பதித்தவர் அவர். 75 வயதிலும் புகழுடன் திகழ்ந்தவர். தமிழ் மக்களின் பேராதரவையும் அன்பையும் பெற்றவர். அவர் இன்று நம்மிடையே இல்லை என்பதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. தனிப்பட்ட முறையில் என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அவரது இழப்பு திரையுலகிற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பல்வேறு மொழிகளில் இசையமைத்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கான புகழ்பெற்ற அறிமுகப் பாடலையும் உருவாக்கியவர் தேவா. இன்றளவும் அந்தப் பாடல் ரஜினிகாந்தின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து, ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
தேவாவை இழந்து வாடும் அவரது மகனும் இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர்கள் மீது மட்டும் குற்றம் சுமத்துவது உள்நோக்கம் கொண்டதாக இருக்கும். உலகச் சந்தையில் நிலவும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் விலைவாசி உயர்வுக்குப் பின்னணியில் இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவரிடம், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் போட்டியிட உள்ளதாகவும், அவரை எதிர்த்து தமிழக வெற்றிக்கழக கூட்டணி சார்பில் நீங்கள் களம் இறங்குவதாகவும் செய்திகள் பரவுகிறதே? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு திருமாவளவன் ஆத்திரத்துடன் பதிலளித்தார். அவர் கூறுகையில், “நான் எந்த இடைத்தேர்தலிலும் நிற்கப் போவதில்லை” என தெரிவித்தார்.