தமிழக செய்திகள்

திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் - திருமாவளவன் ஓபன் டாக்

நான் எம்எல்ஏ ஆகாவிட்டாலும் என்னால் அமைச்சரவையில் இடம்பெற முடியும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியிருப்பதாவது,

சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெறவில்லை என்றாலும் கூட என்னால் அமைச்சராக முடியும். தவெக தரப்பில் இருந்து அதற்கு அழைப்பும் விடுக்கப்பட்டது. விசிகவின் முன்னணி நிர்வாகிகளும் அதனை வலியுறுத்தினார்கள். மேலும் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்றெல்லாம் ஆலோசனை வழங்கினார்கள். பதவி ஆசை இருந்திருந்தால் நான் அவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டிருக்க முடியும். ஆனால் எனக்கு பதவி ஆசை இல்லை.

இப்பொழுதும் திருச்சி கிழக்கு தொகுதியில் திருமாவளவன் போட்டி போடவுள்ளார் என்றெல்லாம் பேசுகிறார்கள். எந்த இடைத்தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன் என்று 100 சதவீதம் சொல்கிறேன். அதற்கான வாய்ப்பு இல்லை. இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்பதை முதலமைச்சர் விஜயிடம் ஏற்கனவே கூறிவிட்டேன். என் எண்ணத்தை யாரும் மாற்றி விட முடியாது.

SCROLL FOR NEXT