தமிழ்நாட்டில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறாது. தவெக கூட்டணி ஆட்சி எந்த சூழலிலும் கவிழ வாய்ப்பில்லை என்று திருமாவளவன் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக மட்டும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை பயன்படுத்த முடியும்.
* தமிழ்நாட்டில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறாது. தவெக கூட்டணி ஆட்சி எந்த சூழலிலும் கவிழ வாய்ப்பில்லை.
* இதுபோன்ற குற்றச்செயல்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. திமுக, அதிமுக ஆட்சிக்காலத்தில் மாறி மாறி எழுந்துள்ளன. இப்போதும் அது தொடர்கிறது.
* இதை கட்டுப்படுத்துவதற்கு ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பொறுப்பு இருக்கிறது. முதல்வருக்கு முதன்மையான கடமையாக உள்ளது. ஆகவே முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுப்பது கடமை. முதலமைச்சர் இதை கட்டுப்படுத்த கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தொடர்புடையவர்கள் யாரும் தப்பித்து விடக்கூடாது.
* செக்கனூரணி காவல் நிலையத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிலரை இடைநீக்கம் செய்துள்ளார்கள். என்றாலும் கூட இதுபோன்ற குற்றச்செயல்கள் பெருக விடாமல் தடுப்பதற்கு காவல் துறையினருக்கும் இதர அதிகாரிகளுக்கும் உரிய வழிகாட்டுதலை அளிப்பது அரசின் கடமை.
* ஆகவே, முதலமைச்சர் காவல் துறையினரை காவல் மரணம் இல்லாதபடி வழிநடத்த வேண்டும். அந்த குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.