தமிழக செய்திகள்

திமுகவுடன் நட்பு தொடர்கிறது - திருமாவளவன்

விசிகவில் இருந்து விலகிய ஒருவரை திமுகவில் இணைத்தது எங்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அமைச்சரவையில் இடம் பெற்றதாலேயே கூட்டணியில் இணைந்ததாக அர்த்தம் அல்ல.

* கூட்டணி தொடர்பாக தான் ஆதரவு கட்சிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். ஆனால் அதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

தவெக கூட்டணி

* இன்னும் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் கூட்டணி அமையவில்லை.

* அமைச்சரவையில் இடம் பெற்றதும் திமுகவுக்கு துரோகம் இழைத்து விட்டதாக பேசுகிறார்கள்.

* விசிகவில் இருந்து விலகிய ஒருவரை திமுகவில் இணைத்தது எங்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

திமுக - விசிக நட்பு

* திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நட்பு தொடர்கிறது.

* மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகு தான் தவெக அரசை விசிக ஆதரித்தது என்று அவர் கூறினார்.