சென்னை அசோக் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பதவி ஆசைக்காக தவெகவுடன் கூட்டணி என்ற முடிவு எடுக்கவில்லை.
* ஏன் இந்த முடிவை எடுத்தோம் என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கூறியிருக்கிறோம்.
* திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கூறிவிட்டு தான் தவெகவிற்கு ஆதரவு என்ற முடிவை எடுத்தோம்.
* ஸ்டாலினோ, உதயநிதியோ எங்கள் முடிவை எதிராக பார்க்கவில்லை.
* அரசியல் சூழல் காரணமாக தவெக கூட்டணியில் இணைந்தோம்.
* விசிகவில் பெரும்பான்மையானவர்கள் அமைச்சரவையில் பங்கு பெறுவதையே விரும்பினர்.
* கட்சியின் நலன்களை கருத்தில்கொண்டு அமைச்சரவையில் இடம் பெற்றோம்.
* நான் அமைச்சரவையில் இடம் பெற தொண்டர்கள் விரும்பினர்.
* நான் அமைச்சராக வேண்டும் என்ற தொண்டர்களின் கோரிக்கையை நான் ஏற்கவில்லை.
* கட்சியின் மூத்த உறுப்பினர், கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு அமைச்சராக வேண்டும் என நினைத்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.