தமிழக செய்திகள்

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன? - திருமாவளவன் கேள்வி

தொகுதி மறுவரையறை மசோதாவால் தென்னிந்திய மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் உள்ளது என்றார் திருமாவளவன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன?

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுக என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

தென்னிந்திய மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் உள்ளது.

இந்தியா கூட்டணியின் நிலைப்பாடுடன் இணைந்து விசிக பயணிக்கும்.

சேலத்தில் அம்பேத்கர் சிலையை 5 ஆண்டுகளாக திறக்க முடியவில்லை.

கடந்த ஆட்சியின்போது அம்பேத்கர் சிலையைத் திறக்க முயன்றோம்.

சிலைகளைத் திறக்க அனுமதி பெறுவது மிகவும் கடினமாக உள்ளது.

தமிழகத்தில் மட்டும்தான் அம்பேத்கர் சிலையைத் திறக்க அனுமதி பெற முடியவில்லை.

தவெக அரசு அம்பேத்கர் சிலைகளைத் திறக்க முன்வர வேண்டும் என தெரிவித்தார்.