திருமாவளவனின் கார் நம்பர் 
தமிழக செய்திகள்

‘TN 07 CM 2031’: 2031-ல் திருமாவளவன் முதலமைச்சர் வேட்பாளரா?- கார் பதிவெண்ணை சுட்டிக்காட்டி இணையதளத்தில் பரபரப்பு

முதல் முறையாக தமிழக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைளும் இடம்பெற்றுள்ளது. அந்த கட்சியை சேர்ந்த வன்னியரசு அமைச்சராகவும் இருக்கிறார்.

செம்பரம்பாக்கத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்ற கார் பதிவெண் இப்போது பேசு பொருளாகி இருக்கிறது.

‘TN 07 CM 2031’ என்ற பதிவெண் கொண்ட டெஸ்லா காரில் திருமாவளவன் சென்றிருந்தார். இந்த எண்ணை அடிப்படையாக வைத்து தலைவர் 2031-ல் முதலமைச்சராவது கன்பார்ம் என்று சிறுத்தைகள் பரபரப்பாக பேசிக் கொண்டனர்.

ஏற்கனவே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் சேர்ந்து ஆட்சி அமைக்க திட்டம் போட்டதாகவும், அப்போது முதலமைச்சர் வேட்பாளராக திருமாவளவனை முன்னிலைப்படுத்தியதாகவும் பேச்சுக்கள் எழுந்தது. ஆனால் அதை திருமாவளவன் மறுத்தார்.

அதே நேரம் முதல் முறையாக தமிழக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைளும் இடம்பெற்றுள்ளது. அந்த கட்சியை சேர்ந்த வன்னியரசு அமைச்சராகவும் இருக்கிறார். இது விடுதலை சிறுத்தைகளின் வளர்ச்சியை காட்டுவதாகவும் அடுத்த தேர்தலில் கட்சிக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கும். விடுதலை சிறுத்தைகள்தான் ஆட்சியை தீர்மானிக்கும் தேர்தலாக இருக்கும் என்றும் பேசுகிறார்கள்.

இதை அடிப்படையாக வைத்துதான் இப்போது இந்த கார் பதிவெண்ணையும் சுட்டிக்காட்டி அடுத்த தேர்தலில் திருமாவளவன் தான் முதலமைச்சர் என்று சிறுத்தைகள் ஆர்வத்துடன் பேசி வருகிறார்கள். இன்னொரு உதாரணத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதே போல் 2024-ல் ‘தி கோட்’ திரைப்படம் வெளிவந்த போது முதலமைச்சர் விஜய் பயன்படுத்திய காரின் பதிவெண் ‘TN 07 CM2026’ என்பதாகும். அதன்படி அவர் முதலமைச்சர் ஆகி விட்டார். அந்த வகையில் திருமாவளவனுடைய காரும் இப்போது தேர்தலுடன் இணைத்து பேசப்படுகிறது.

SCROLL FOR NEXT