தமிழக செய்திகள்

ஆட்டோ டிரைவர்கள் நடத்திய ஆயுத பூஜையில் திருநீறுபூசி அமர்க்களப்படுத்திய திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர்கள் நடத்திய ஆயுத பூஜையில் திருமாவளவன் பங்கேற்றார். கற்பூர ஆரத்தி காட்டியபோது அதை வணங்கினர்.

சென்னையில் ஆயுத பூஜை விழாவில் திருமாவளவன் திருநீறு பூசப்பட்டு தொழிலாளர்களுடன் இணைந்து வழிபாடு செய்தார். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சென்னையில் ஆயுத பூஜை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முக்கியமாக ஆட்டோ தொழிலாளர்கள் தங்கள் ஆட்டோக்களை கழுவி சுத்தம் செய்து மாலைகள் அணிவித்து சந்தனம், குங்குமம் வைத்து ஆட்டோ ஸ்டாண்டுகளில் வரிசையாக நிறுத்தி வைத்தனர். அங்கு அலங்கரிக்கப்பட்ட சாமி படங்களுக்கு அவல், பொரி, பழங்கள் படையலிட்டு வழிபட்டனர். அதை தொடர்ந்து ஆட்டோக்களுக்கு கற்பூரம் காட்டி வழிபட்டனர்.

திருநீறு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர்கள் நடத்திய ஆயுத பூஜையில் திருமாவளவன் பங்கேற்றார். கற்பூர ஆரத்தி காட்டியபோது அதை வணங்கினர். அதை தொடர்ந்து அவரது நெற்றியில் திருநீறு பூசப்பட்டது. அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட திருமாவளவன் தொழிலாளர்களுக்கும் திருநீறு பூசிவிட்டார்.

இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமாவளவனுக்கு திருநீறு பூசும் பழக்கம் கிடையாது. பூசினாலும் அழித்து விடுவார் என்று கூறப்படும் நிலையில் இந்த காட்சியை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

SCROLL FOR NEXT