தமிழக செய்திகள்

PMK| சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.வுக்கு எதிராக ராமதாஸ் போட்டி வேட்பாளரை நிறுத்த திட்டமா?- திலகபாமா பேட்டி

அனைத்து நிர்வாகிகளும் அன்புமணியின் தலைமையில் களப்பணியாற்றி வருகின்றனர்.

மாலை மலர்

உச்சநீதிமன்றத்தில் பா.ம.க.,ராமதாஸ் மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வழக்கு போட்டிருப்பது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. உறுதிப்படுத்தப்பட்ட சின்னம், தலைவராக அன்புமணி உள்ளார். எல்லாம் சரியாக அமையும்.

தேர்தலில், ஒவ்வொரு பகுதி மக்கள் பிரச்சனைகளின் அடிநாதம் தொட்டு பிரசாரம் செய்யப்படும். உரிமை காக்க, தலைமுறை மீட்க நடைப்பயணத்தில் குடகனாறு, குண்டாறு இணைப்பு பிரச்சினை உள்ளிட்ட ஏராளமான விஷயங்களை பற்றி விளக்கி பேசப்பட்டுள்ளது.

தமிழகத்தில், பாலியல் வன்கொடுமை தொடர்கிறது. பெண்கள் வெளியே நடமாடமுடியாத நிலை உள்ளது. போதையால் சீரழிந்துவிட்ட சமுதாயமாக தமிழகம் மாறிவிட்டது. அதற்கு தி.மு.க. முழு பொறுப்பேற்க வேண்டும்.

தலைமை கட்டளையிட்டால் தி.மு.க.வை வெளியேற்றுவதற்கு எந்தக்களத்திலும் பணியாற்ற தயாராக உள்ளேன். பா.ம.க.வில் எந்த தொய்வும் இல்லை. அனைத்து நிர்வாகிகளும் அன்புமணியின் தலைமையில் களப்பணியாற்றி வருகின்றனர்.

அரசு அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக இயங்குகின்றனர். நாங்குநேரி பிரச்சனையில் உண்மையான குற்றவாளியை பிடிப்பதை விட்டு, ஆதரவு தெரிவிக்க செல்பவர்களை தடுத்து நிறுத்துகின்றனர்.

மக்களுக்காக அதிகாரிகள் செயல்பட வேண்டும். இல்லையெனில் தூய்மை பணியாளர்கள், அரசுப்பணியாளர்கள், செவிலியர்கள் ரோட்டுக்கு வந்து போராடியது போல் அவர்களையும் தி.மு.க., ரோட்டில் உட்கார வைத்துவிடுவார்கள். திண்டுக்கல் கோம்பை, ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் வன அத்துமீறல், சட்டவிரோத தடுப்பணை கட்டியது உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை முன்வைக்கிறேன். நிச்சயம் தவறு செய்யும் அதிகாரிகள் மீது புகார் அளிப்பேன். அ.தி.மு.க., தே.ஜ., கூட்டணியில் பா.ம.க., வேட்பாளர்கள் களமிறங்கும் தொகுதிகளில் போட்டி வேட்பாளர்களை பா.ம.க., ராமதாஸ் நிறுத்துவார் என நினைக்க வேண்டியதில்லை. அங்கிருப்பவர்கள், அவர் மீதான பாசத்தில், விட்டுக்கொடுக்க முடியாமல் நிற்கிறார்களே தவிர, பா.ம.க., தலைவர் அன்புமணியை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை என்றார்.