தமிழக செய்திகள்

VIDEO: எனக்கு அதிகமாக மென்டல் டார்ச்சர் கொடுத்து வருகிறார்கள்: நிதி ஆலோசகர் வெளியிட்ட காணொளி

சென்னையை சேர்ந்த 27 வயதான ஹரிஷ், ‘ஃபைனான்ஸ் வித் ஹரிஷ்’ என்ற சமூக வலைதளம் ஒன்றை நடத்தி வந்தார்.

சென்னையை சேர்ந்த நிதி ஆலோசகரான ஹரிஷ், அவதூறான குற்றச்சாட்டுகள் மூலம் தன்னை அதிகமாக மனதளவில் காயப்படுத்தி தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாக சாமுவேல் என்பவர் மீது குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த 27 வயதான ஹரிஷ், ‘ஃபைனான்ஸ் வித் ஹரிஷ்’ என்ற சமூக வலைதளம் ஒன்றை இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் நடத்தி வந்தார்.

நிதி ஆலோசனைகள்

இவரின் கணக்கை சமூக வலை தளங்களில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகாமோனோர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர் தனது வலைப்பக்கம் மூலமாக பயனர்களுக்கு நிதி ஆலோசனைகள வழங்கி வந்தார்.

கணக்கு முடக்கம்

இதையடுத்து ஹரீஷ் நிதி ஆலோசனைகள் குறித்து தவறான தகவல்களை வழங்கி வருவதாக வென்ச்சர் ஸ்டுடியோ ஜெமூரியா இன்க் தலைமை செயல் அதிகாரியான ஜேசன் சாமுவேல் மெட்டா நிறுவனத்திடம் இணைய வழி மூலம் புகார் அளித்தார்.

இதன் காரணமாக சாமுவேல் வைத்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, ஹரிஷின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மெட்டா நிறுவனம் முடக்கியது.

தொடர்ந்து மன உளைச்சல்

இதையடுத்து ஹரிஷ் மற்றொரு சேனலை தொடங்கி வீடியோ வெளியிட்டு வந்த நிலையில், அதன் மீதும் புகார் அளிக்கப்பட்டது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஹரிஷ், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அவர் அந்த வீடியோவில், “என் மீது ஏதாவது ஒரு தவறு இருந்தால் நீங்கள் என்னை கேள்வி கேட்கலாம். ஆனால் எனது குடும்பத்தை டார்கெட் செய்து, எம்.எல்.ஏ மற்றும் அரசியல்வாதிகளை தெரியும் என கூறுகிறார்.

மேலும் நான் அவருக்கு பணம் கொடுக்காமல் இருந்தால், என்னிடம் உள்ள அனைத்தையும் எடுத்து கொள்வேன் என்று கூறுகிறார். எனக்கு இதற்கு அப்புறம் என்ன செய்வது என்றே தெரியவில்லை.

என்னால் மற்றவர்களுக்கும் கெட்ட பெயர் வருமாறு கூறி வருகிறார். எனது நண்பர்களை பார்ப்பதற்கே எனக்கு குற்ற உணர்வாக இருக்கிறது.

என் மீது வருமான வரி தாக்கல் செய்யப்பட்டால் 60 சதவீதம் அபராதம் விதித்து சிறையில் அடைப்பார்கள்.

அதற்கு பதிலாக அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்துவிட்டால், நாம் சுமூகமாக பேசி முடித்து கொள்ளலாம் என்று கூறுகிறார்.

எனக்கு அதிகமாக மென்டல் டார்ச்சர் கொடுத்து வருகிறார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தனது மகனுக்கு மனதளவில் அதிகமாக டார்ச்சர் கொடுத்து, தற்கொலைக்கு தூண்டிய ஜேசன் சாமுவேல் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹரிஷ் தந்தை கோரிக்கை வைத்துள்ளார்.

பயனர்கள் கேள்வி

இந்த நிலையில் பங்கு சந்தையில் உள்ள சில முரண்பாடுகளை எதிர்த்து ஹரிஷ் கேள்வி கேட்டு, அதனை சுட்டிக்காட்டி வந்ததால் அவர் குறிவைக்கப்பட்டாரா என சமூக வலைதளத்தில் பயனர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஹரிஸ் தற்கொலைக்கு பின்புறத்தில் வர்த்தக மாஃபியாக்களும், செல்வாக்கு மிக்கவர்களும் இருக்கிறார்களா என்ற கேள்வியை இந்த மரணம் எழுப்புவதாகவும் பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT