பெரம்பூரில் பிரச்சாரத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், "மக்கள் சாலைகளில் கூடியதால் பிரச்சார வாகனங்கள் நகர முடியவில்லை.
போலீஸ் பாதுகாப்போ, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
விஜய் பரப்புரைக்கு போதிய காவல் துறை பாதுகாப்பு இல்லை" என்று தவெக இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் தமிழ்நாடு, இந்திய தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் மனு அளித்துள்ளார்.