தமிழக செய்திகள்

துணிக்கடையில் கைவரிசை - ‘திரீ ரோஸஸ்’ திருட்டு கும்பல் கைது

பெண்களின் புகைப்படத்தை புதுச்சேரி காவல்துறைக்கு தமிழக, ஆந்திரா போலீசார் அனுப்பி வைத்தனர்.

துணிக்கடையில் கைவரிசை காட்டிய 3 பெண்களையும் போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.

'த்ரீ ரோஸஸ்’ திருட்டு கும்பல்

மத்திய பிரதேசத்தை சேர்ந்த 3 பெண்கள் அடங்கிய குழு தென்னிந்தியாவில் தொடர்ச்சியாக திருட்டு வேலையில் ஈடுபட்டு வந்தது. இதனால் இவர்களுக்கு ‘த்ரீ ரோஸஸ்’ பெண்கள் திருட்டு கும்பல் என்று போலீசார் பெயர் வைத்தனர். சென்னை மாம்பலத்தில் உள்ள துணிக்கடைகளில் 2 இடங்களில் இந்த கும்பல் கைவரிசை காட்டிவிட்டு தப்பியது. இதையடுத்து அந்த பெண்களின் புகைப்படத்தை புதுச்சேரி காவல்துறைக்கு தமிழக, ஆந்திரா போலீசார் அனுப்பி வைத்தனர்.

புதுச்சேரியில் திருட்டு

இந்த நிலையில் தேடப்பட்டு வந்த இந்த 3 பெண்களும் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள பிரபல துணிக்கடையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை கையும் களவுமாக பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். இதற்காக மாறுவேடத்தில் துணிக்கடைக்குள் போலீசார் நுழைந்தனர். அங்கு அந்த 3 பெண்களையும் போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.

பெண்கள் கைது

புதுச்சேரி போலீசார் கைதான 3 பெண்களையும் சென்னை மாம்பலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து 3 பேரையும் மாம்பலம் போலீசார் சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.