தமிழக செய்திகள்

பெண் யூடியூபர் மதுமிதா மீது திருட்டு வழக்குப்பதிவு

மதுமிதாவுக்கு ஓரிரு நாட்களில் சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

வழக்கில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசியை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த 98 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். ஆனால் அதன்பிறகும் மதுமிதா பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வரைலாக பரவின.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்பத்துக்கோணம் அனந்த நாடார்குடி பகுதியை சேர்ந்த பிரபல யூ-டியூபரான மதுமிதாவின் வீட்டில் 118 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறியது.

காண்டிராக்டர் பரபரப்பு புகார்

இந்த வழக்கில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசியை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த 98 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். ஆனால் அதன்பிறகும் மதுமிதா பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வரைலாக பரவின.

இந்நிலையில் மதுமிதா மீது நெல்லை கே.டி.சி. நகரை சேர்ந்த பேச்சிமுத்து (வயது 35) என்ற காண்டிராக்டர் ராஜக்கமங்கலம் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் கடந்த 2022-ம் ஆண்டு மதுமிதா தன்னிடம் 5 பவுன் நகையை பறித்து சென்று விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

பாளை தாலுகா போலீசுக்கு மாற்றம்

இந்த புகார் மதுமிதா விவகாரத்தில் மேலும் பரபரப்பை கிளப்பியது. இதைத்தொடர்ந்து மதுமிதா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனால் மதுமிதா தலைமறைவானதாகதாகவும், அவரை போலீசார் தேடி வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் காண்டிராக்டர் பேச்சிமுத்துவிடம் மதுமிதா நகை பறித்ததாக கூறப்பட்ட சம்பவ இடம் பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்டது என்பதால் ராஜாக்கமங்கலம் போலீசார் இந்த வழக்கை பாளையங்ேகாட்டை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு மாற்றினர்.

காண்டிராக்டரிடம் விசாரணை

அதன்பேரில் நேற்று பாளை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், புகார்தாரரான பேச்சி முத்துவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினார். பின்னர் அவர் கூறிய தகவல்களை எழுத்து பூர்வமாக புகாராக பெற்றுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து பேச்சிமுத்து அளித்த புகாரின் பேரில் பெண் யூடியூபர் மதுமிதா மீது பழைய இந்திய தண்டனை சட்டம் 379 பிரிவின் கீழ் அதாவது திருட்டு என இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து மதுமிதாவுக்கு ஓரிரு நாட்களில் சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மதுமிதா மீதான பேச்சிமுத்துவின் புகார் குறித்து கூறியதாவது:-

காரில் வைத்து மசாஜ்

காண்டிராக்டர் பேச்சி முத்துவுக்கு அடிக்கடி முதுகுவலி ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் அடிக்கடி பிசியோ தெரபி சிகிச்சை பெற்று வந்து உள்ளார். அப்போது மதுமிதா அவருக்கு அறிமுகமாகி உள்ளார். பின்னர் இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி பழகி வந்துள்ளனர்.

ஒருகட்டத்தில் மதுமிதா இரட்டை அர்த்தத்தில் பேசியதால் அவரிடம் பேசுவதை பேச்சிமுத்து தவிர்த்து வந்ததாக கூறுகிறார். கடந்த 2022-ம் ஆண்டு நெல்லை நீதிமன்றம் அருகே வந்த மதுமிதா அங்கிருந்தபடி பேச்சி முத்துவுக்கு போன் செய்து அழைத்து உள்ளார். அங்கு அவர் செல்லவே, 2 பேரும் தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள பாளை கே.டி.சி. நகரை அடுத்த உத்தம பாண்டியன்குளம் விலக்கு பகுதிக்கு சென்று உள்ளனர்.

மதுமிதா

அங்கு பேச்சிமுத்துவுக்கு காரில் வைத்தே மதுமிதா மசாஜ் செய்துள்ளார். இதையடுத்து மசாஜ் செய்து முடித்தபின்னர் மதுமிதாவை புதிய பஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து பேச்சிமுத்து பஸ் ஏற்றி வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து காரில் பேச்சிமுத்து புறப்பட்ட போது அவர் கழுத்தில் கிடந்த நகையை காணவில்லை என்றும், இதுகுறித்து மதுமிதாவிடம் கேட்டபோது, அவர் மிரட்டல் விடுத்து அசிங்கப்படுத்தி விடுவதாக கூறியதாகவும் பேச்சிமுத்து தெரிவித்துள்ளார். அதன் காரணமாகவே 4 ஆண்டுகளாக புகார் அளிக்கவில்லை என கூறினார். ஆனால் தற்போது மதுமிதா பற்றி சமூக வலை தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவிய நிலையில் துணிச்சலாக புகார் அளித்ததாக பேச்சிமுத்து கூறியுள்ளார்.

சம்மன் அனுப்ப நடவடிக்கை

மதுமிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரிடம் விசாரிப்பதற்காக சம்மன் அனுப்பி வரவழைக்க பாளையங்கோட்டை போலீசார் முடிவு செய்துள்ளனர். இன்னும் ஒரிரு நாட்களில் இதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என போலீசார் தெரிவித்தனர்.

போலீசாரின் முழுமையான விசாரணைக்கு பின்னரே பேச்சிமுத்து அளித்த புகார் உண்மைதானா? அவர் புகார் அளித்தபடி மதுமிதா அவரிடம் நகையை திருடினாரா? அல்லது பேச்சிமுத்து நாடகமாடுகிறாரா? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT