தமிழக செய்திகள்

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா: நேர்த்திக் கடனை செலுத்திய பக்தர்கள்

கோவில் வண்ண மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த மருதூரில் புகழ்வாய்ந்த ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக, பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.

கோவில் வண்ண மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

அதன்பின், கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் அலகு காவடி, மயில் காவடி உள்ளிட்டவற்றுடன் இறங்கிய பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.