அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதத்தை வழங்கினர்.
3 பேரின் ராஜினாமாக்களும் ஏற்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார்.
ராஜினாமா செய்த கையோடு அமைச்சர் ஆதவ் அர்ஜூனானை 3 பேரும் சந்தித்து, தவெகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
இந்நிலையில், அதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த 3 பேரும் முதலமைச்சர் ஜோசப் விஜயுடன் சந்தித்துள்ளனர்.
மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் முதல்வரை சந்தித்துள்ளனர்.
தவெகவில் இணைந்நத மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.