தமிழக செய்திகள்

‘வளர்ச்சியைத் தரும் விடியலையே மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இம்முறையும் தமிழ்நாட்டு மக்கள் திமுகவைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விடியலைத் தரும் திமுக ஆட்சியையே மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“இரண்டு மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?

எங்கள் மேடைகளில்,

தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் சாதனைகளையும், அவற்றால் பயனடைந்தவர்கள் குறித்தும் தரவுகளோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம்!

மறுபுறம்,

சொல்வதற்குச் சாதனைகளும் - செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருக்கின்றனர்!

தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சியைத் தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.