முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சியிலிருந்து விலகிய நிலையில், ‘வீ தி லீடர்ஸ்’ என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார். தொடர்ந்து இதனை அரசியல் கட்சியாகவும் கொண்டு செல்ல உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அண்ணாமலையின் இந்த புதுகட்சி செய்தி என்பது பாஜகவின் புதிய உத்தி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
“ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே 2500 அமைப்புகளை வழி நடத்துகிறது. அண்ணாமலை தொடங்கும் அமைப்பு 2501 அவ்வளவுதான்.
பாஜக என்ற கட்சி தமிழ்நாடு மக்களிடம் எடுபடவில்லை. எனவே, பெயரை மாற்றி வியாபாரத்தை வெற்றிகரமாக்க முடியுமா என்று மோடி, அமித்ஷா ஆசியுடன் முயற்சிக்கிறார் அண்ணாமலை.
ஆரம்பித்த இரண்டு மணி நேரத்தில் 2.50 லட்சம் பேர் சேர்ந்து இருப்பதாக கூறுவதெல்லாம் பாஜக கட்சியினர் இதில் இணைக்கப்படுகிறார்கள் என்பதே. அண்ணாமலை போடுவது "மாரீச மான் வேடம்" என்பதை தமிழ்நாடு மக்கள் நன்கு அறிவார்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.