சென்னை விமான நிலையத்தில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான திமுகவின் நிலைப்பாடு தொடர்பாக பேசிய அவர் கூறியதாவது;
“எங்களைப் பொறுத்தவரை ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவும் வேகமாக கொண்டுவரப்படும். தொகுதி மறுவரையறை நடக்கவேண்டும்; இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் அது நல்லது.
நேற்று முன்தினம் வந்திருந்தால் காங்கிரஸிற்கு அரசியல் தெரியும் என நாம் புரிந்துகொண்டிருக்கலாம். எதிர்க்கட்சியாக அரசியல் செய்யாமல், பாஜகவிற்கு ஃபுல் டாஸ் பந்தை வீசிக்கொண்டிருக்கிறார்கள் காங்கிரஸ். அது அமித்ஷா கையில் கிடைத்தால் அவர் சும்மா விடுவாரா?
உடனடியாக திமுக பாஜக கூட்டணிக்கு செல்லாது. ஆனால், 2029ல் அதை நோக்கித்தான் தமிழ்நாடு அரசு செல்கிறது. இதில் ஆச்சர்யமான விஷயம் அதிமுகவின் நிலைப்பாடுதான். இனி அமலாக்கத்துறையோ, சிபிஐ-யோ திமுக பக்கம் வராது.
ஏற்கனவே வழக்குகளில் இருப்பவர்கள் வெளியே வந்து காந்தியாக மாறிவிடுவார்கள்.” என தெரிவித்தார்.