நெல்லை கல்குவாரியில் ராட்சத பாறை உருண்டு விழுந்த இடத்திற்கு மாவட்ட கலெக்டர் விஷ்ணு, நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் ஆகியோர் முகாமிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
அப்போது டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. 2 முறை பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால் மீட்பு பணியில் சற்று தொய்வு ஏற்பட்டு உள்ளது.
தற்போது சிக்கியவர்களில் 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். ஒருவர் சத்தம் போட்டுக்கொண்டே உள்ளார். அவரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் 3 பேரையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வந்து கொண்டிருக்கிறார்கள். கலெக்டர் விஷ்ணு உத்தரவின்பேரில் அரக்கோணத்தில் இருந்து அந்த குழு நேற்று நள்ளிரவிலேயே புறப்பட்டு விட்டது. அவர்கள் வந்த உடன் மீட்பு பணிகள் மேலும் துரிதப்படுத்தப்படும் என்றார்.