தமிழக செய்திகள்

பெரும்பான்மையை நிரூப்பிக்க வேண்டிய களம் சட்டப்பேரவைதான்..!- ப.சிதம்பரம்

இந்த விதியை விளக்கி வலியுறுத்திய தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளை நான் பாராட்டுகிறேன்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியதாவது:-

சட்டமன்றத் தேர்தலில் எந்த அரசியல் கூட்டணிக்கும் அல்லது அரசியல் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், ஆளுநரின் கடமை என்ன?

சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதன்மைக் கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.

இது தான் அரசியல் விதி. இது தான் நாடாளுமன்ற மரபு.

அந்தக் கட்சியின் தலைவர் தனக்குப் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்று நிரூப்பிக்க வேண்டிய களம் சட்டமன்றம்; ஆளுநர் மாளிகை அல்ல. இது தான் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு:

1994 (3) SCC 1

இந்த விதியை விளக்கி வலியுறுத்திய தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளை நான் பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT