தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ தி லீடர்ஸ்’ இயக்கத்தின் முதல் மாநில மாநாடு பொள்ளாச்சியில் கலை, நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
கடந்த ஜூன் மாதம் பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை இந்த புது இயக்கத்தைத் தொடங்கினார். இந்நிலையில் போதையில்லா தமிழகம் என்ற பெயரில் முதல் மாநாடு இன்று நடைபெறுகிறது. மாநாட்டில் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.
மாநாட்டில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். குடிநீர், கழிப்பறை, ஓய்வறை என அனைத்து அடிப்படை வசதிகளும் மாநாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.