தமிழக செய்திகள்

‘தவெக விவகாரத்தில் மரபிலுள்ள நடைமுறையையே ஆளுநர் பின்பற்ற வேண்டும்’ - சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா

தவெக ஆளுநர் மாளிகையில் அல்ல, சட்டமன்றத்தில்தான் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்,

“நாங்கள் இந்த விவகாரத்தில் தெளிவாக கூறியுள்ளோம். இடதுசாரி கட்சிகளான சிபிஐ, சிபிஎம் மற்றும் விசிக ஆகிய கட்சிகள் பெரும்பான்மை தவெகவிற்கே கிடைத்துள்ளது என்பதில் உறுதியாக உள்ளனர். ஆளுநர் தனிப்பெரும் கட்சியான தவெகவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். அந்த அரசு ஆளுநர் மாளிகையில் அல்ல, சட்டமன்றத்தில்தான் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

தனிப்பெரும் கட்சியான தவெகவை ஆட்சியமைக்க அழைக்கவேண்டும் என ஆளுநரிடம் கூறியுள்ளோம். தனது விருப்புரிமை அதிகாரம் போன்றவற்றை மேற்கோள் காட்டி ஆளுநர் இந்தச் செயல்பாட்டில் எந்தத் தடையையும் ஏற்படுத்தக் கூடாது. இது போன்ற விவகாரங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள மரபுகளையும், வழிமுறைகளையுமே ஆளுநர் பின்பற்ற வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.