தமிழக செய்திகள்

எக்காலத்திலும் மேகதாதுவில் அணை கட்ட முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார்- அமைச்சர் நிர்மல் குமார்

அரசியல் காரணங்களுக்காக டி.கே.சிவகுமார் இவ்வாறு நடந்து கொள்கிறார்.

தலைமை செயலகத்தில் மின்சாரம் மற்றும் சட்ட துறை அமைச்சர் நிர்மல் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்டிருந்த விரைவு நீதிமன்றங்கள் ஏற்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழில் வழக்காடுவதற்கு நீதிமன்றங்களில் எந்த தடையும் இல்லை. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. அது தொடர்கிறது.

மகிளா நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து வருகிறோம்.

கோவை வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்தியிருக்கிறார். அது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.

ஊழியர்கள் பற்றாக்குறை இருக்கக்கூடிய இடங்களை கண்டறிந்து வருகிறோம்.

கடந்த ஆட்சியில் பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகும்போது அவர்கள் மீது விசாரணை நடக்கும் போதே பெரிய அநீதி இழைக்கப்பட்டது. போலீஸ் விசாரணையே முறையாக கடந்த ஆட்சியில் நடைபெறவில்லை.

வழக்கு விசாரணை எவ்வாறு நடைபெற வேண்டும் என்பது குறித்து முதலில் ஒரு வழிகாட்டு நெறிமுறை ஏற்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

முதலமைச்சர் எந்த காலத்திலும் மேகதாதுவில் எந்த விதத்திலும் அணை கட்டுவதற்கு எந்த அனுமதியும் நாம் தரப்போவதில்லை. 2 மாநிலங்களுக்கு இடையே சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கொண்டு வர அவர்கள் முயற்சிக்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காக டி.கே.சிவகுமார் இவ்வாறு நடந்து கொள்கிறார்.

2 மாநில மக்களுக்கிடையே அமைதி தேவை. 2 மாநிலங்களுக்கு இடையே தொழில் உறவுகள் உள்ளன. தேவையில்லாமல் அரசியல் செய்வதற்காக சிவகுமார் இவ்வாறு செய்கிறார்.

அவர் இவ்வாறு சர்ச்சை ஏற்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தன்னிச்சையாக அவர் பொறுப்புணர்வில்லாமல் செயல்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். தமிழக முதலமைச்சர் விஜய் எந்த காலத்திலும் மேகதாது–வில் அணை கட்ட அனு மதிக்க மாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.