தமிழக செய்திகள்

தவெக நாற்காலியில் 2 கால்கள்தான் இருக்கு.. எப்போது வேண்டுமானாலும் கவிழும்- இ.பி.எஸ்

அதிமுக தீர்ந்துபோன கட்சி இல்லை, மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் கட்சி.

எடப்பாடி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திரைப்படத்தில் நடித்து அதன் மூலம் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.. மக்களுக்கு சேவையாற்றி நீங்கள் வெற்றி பெறவில்லை.

அதிமுக தீர்ந்துபோன கட்சி இல்லை, மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் கட்சி.

தவெகவின் நாற்காலிக்கு 4 கால்கள் இருக்கு. அதுல ரெண்டு கால்தான் அவர்களுடையது. மீதி 2 கால்கள் இரவல் கால்கள். அந்த 2 கால்கள் நகர்ந்தால் நாற்காலி தானாக சாயும். ஆட்சி கவிழும்.

ரூ.10 லட்சம் கோடி கடன் இருப்பது தெரிந்தும் கவர்ச்சி அறிவிப்புகளை விஜய் வெளியிட்டது ஏன்?; இப்போது திட்டங்களை அறிவிக்கிறார்கள்; அதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பதை அறிவிக்கவில்லை மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 வெற்று வாக்குறுதியா? அல்லது நிறைவேற்றுவீர்களா?

எல்லாமே கவர்ச்சி அறிக்கைகள்.. எதுவுமே நடக்கல. தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.

மீண்டும் எப்போது தேர்தல் வந்தாலும் சரி. இடைத் தேர்தல், பொதுத் தேர்தலாக இருந்தாலும் அதிமுக வெல்லும்.

ஃபீனிக்ஸ் பறவைபோல் அதிமுக மீண்டெழும்; தப்பு கணக்கு போடாதீங்க, அதிமுகவை அழிக்க முடியாது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.