தமிழக செய்திகள்

மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு முடிவுரை தொடக்கம்- பியூஷ் கோயல்

பியூஷ் கோயலை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், எல்.எருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் பியூஷ் கோயலை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், எல்.எருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கான முடிவுரை தொடங்கியுள்ளது என சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் திமுக அரசின் மீது மக்கள் கடுங்கோபத்தில் உள்ளனர்.

ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காக அதிமுக- பாஜக இணைத்து கூட்டணி அமைத்துள்ளோம்.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு முடிவுரை தொடக்கியுள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.