தமிழக செய்திகள்

தவெக-வின் கல்வி விருது வழங்கும் விழா: முதலமைச்சர் விஜய்க்கு மாணவர்கள் உற்சாக வரவேற்பு

தமிழ்த்தாய் வாழ்த்துடன் கல்வி விருது வழங்கும் விழா தொடங்கியது.

சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வருகை தந்தார்.

முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், மாணவர்கள், குழந்தைகள், பெற்றோர்களுடன் முதலமைச்சர் விஜய் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்துடன் கல்வி விருது வழங்கும் விழா தொடங்கியது.

விருது

தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் ஆண்டுதோறும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களை நேரில் அழைத்து விருது வழங்கி பாராட்டி வருகிறார்.

அந்த வகையில், இந்த ஆண்டு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு முதல் கட்டமாக இன்று சென்னை நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கேற்றுள்ளனர்.

மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் காலை 11 மணிக்கு விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டு, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

மதியம் 3.30 மணி அளவில், முதலமைச்சர் விஜய் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவச்செல்வங்களுக்கு, அவர்களின் பெற்றோர் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத் தொகையும் வழங்கி, வாழ்த்தி கவுரவிக்க உள்ளார்.

SCROLL FOR NEXT