தமிழ்நாடு செய்திகள்

இந்திய விமானப்படை ஹீரோக்களுக்கு நன்றி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.வி்மானப்படையின் வண்ணமயமான சாகச நிகழ்ச்சிகளை பொது மக்கள் கண்டு களித்தனர்.

மாலை மலர்

இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 72 விமானங்களில் வீரர்கள் சாகச நிகழ்ச்சியை நடத்தி காட்டினார்கள். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.

வி்மானப்படையின் வண்ணமயமான சாகச நிகழ்ச்சிகளை பொது மக்கள் கண்டு களித்தனர்.

இந்நிலையில், விமான சாகச நிகழ்ச்சியை நடத்திய இந்திய விமானப்படை வீரர்களுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

சூப்பர் ஸ்டார்களின் கண்கவர் நிகழ்ச்சியை சென்னை ரசித்துள்ளது - நமது இந்திய விமானப்படை ஹீரோக்களுக்கு நன்றி.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Chennai has enjoyed the spectacular show in its sky by the superstars – our #IAF heroes! Thank you @IAF_MCC!#Airshow2024 pic.twitter.com/8ctBJHc33a