தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையின் மைய பகுதியில் அரசுக்கு சொந்தமான உழவர் சந்தை அமைந்து உள்ளது. இந்த சந்தையில் அனைத்து காய்கறிகளும் விற்பனை செய்யப்படு கின்றன.
இந்த சந்தைக்கு திருவையாறு, திருப்பந்துருத்தி, கண்டியூர், அம்மன்பேட்டை, பள்ளியக்ரஹாரம், வாளமரக்கோட்டை, சூரக்கோட்டை, மருங்குளம், மின்னாத்ததூர், ஏழுப்பட்டி, வாகரக்கோட்டை, கண்டிதம் பட்டு, கொல்லாங்கரை, வேங்கராயன்குடிகாடு ஆகிய கிராமங்களில் தோட்ட சாகுபடி செய்து வாழ்வாதாரத்தை நடத்தி வரும் விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை தினசரி அதிகாலையில் சந்தைக்கு கொண்டு வந்து, அதனை விற்பனை செய்து தங்கள் குடும்ப வாழ்வா தாரத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த புதிய காய்கறிகளை தஞ்சை நகரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இல்லத்தரசிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில், கடந்த வாரம் முழுவதும் 20 டன் வரை காய்கறிகள் வரத்து வந்து கொண்டிருந்தன. ஆனால், (சனிக்கிழமை) அதன் வரத்து 18 டன்னாக குறைந்தது. இதனால் நாட்டு காய்கறிகள் உள்பட அனைத்து காய்கறிகளும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. அதன் விவரம் கிலோ கணக்கில் வருமாறு:-
முருங்கைக்காய் ரூ.98-க்கும், அவரைக்காய் ரூ.96-க்கும், பீன்ஸ் ரூ.112-க்கும், கத்தரிக்காய் ரூ.60-க்கும், வெண்டைக்காய் ரூ.36-க்கும், புடலங்காய் ரூ.50-க்கும், பீர்க்கங்காய் ரூ.48-க்கும், கேரட் ரூ.64-க்கும், பீட்ரூட், முட்டைக்கோஸ் தலா ரூ.50-க்கும், சாம்பார் வெங்காயம் ரூ.56-க்கும், பல்லாரி ரூ.32-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
குறைந்து அளவில் காய்கறிகளையே..
இதேப்போல், இஞ்சி ரூ.160-க்கும், தேங்காய் ரூ.60-க்கும், பாகற்காய் ரூ.62-க்கும், கருணைக் கிழங்கு ரூ.100-க்கும், கொத்தவரங்காய் ரூ.40-க்கும், சேம்பு ரூ.44-க்கும், சேனைக்கிழங்கு ரூ.36-க்கும், சுரைக்காய் ரூ.30-க்கும், பரங்கிக்காய் ரூ.28-க்கும், பூசணிக்காய் ரூ.30-க்கும், மாங்காய் ரூ.20-க்கும், முள்ளங்கி ரூ.28-க்கும், புதினா கீரை கட்டு ரூ.65-க்கும், கொத்தமல்லி கட்டு ரூ.35-க்கும் விலை உயர்ந்து இன்று காலை விற்பனை செய்யப்பட்டது.
இதனால் இல்லத்தரசிகள், பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கு குறைந்த அளவிலான காய்கறிகளையே வாங்கி சென்றனர்.