மின்சாரம் நிறுத்தம்  
தமிழக செய்திகள்

தஞ்சை அருகே பூண்டி, சாலியமங்கலம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற் பொறியாளர் நல்லையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மின்தடை

தஞ்சாவூர் அருகே உள்ள பூண்டி மற்றும் ராகவாம்பாள்புரம் துணை மின் நிலையங்களில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், பூண்டி, சாலியமங்கலம், பச்சைக்கோட்டை, பள்ளியூர், களஞ்சேரி, இரும்புத்தலை, ரெங்கநாதபுரம், திருபுவனம், சூழியக்கோட்டை, கம்பர்நத்தம், மலையர்நத்தம், குடிகாடு, கோவிலூர், புலவர் நத்தம், செண்பகபுரம், மேல கொருக்குப்பட்டு, தென்கொண்டார் இருப்பு, ராரா முத்திரக்கோட்டை, கிருஷ்ணாபுரம், வாளமர் கோட்டை, அருந்தவபுரம், நெய்வாசல், ஆர்சுத்திப்பட்டு, அருமலைக்கோட்டை, சின்னபுலி குடிகாடு, நார்த்தேவன் குடிகாடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூர்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையார்கோவில், துறையுண்டார்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.