தமிழக அரசின் நிதிநிலை குறித்து அமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் தென்னரசு வெற்று அறிக்கை என்று தெரிவித்துள்ளார்.
த.வெ.க. அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கை குறித்து தென்னரசு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கி கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், வாணவேடிக்கை வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றி பொறுப்பிற்கு வந்துள்ள இந்த அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையாலும், ஆழம் தெரியாமல் காலைவிட்டு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையாலும் புஸ்வானமாக மாறிவிட்டதை மறைக்க, ஹைப் ஏற்றிய அறிக்கை ஒன்றினை வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டு , அதனையும் “ஃப்ளாப்” ஆக்கியிருக்கிறது.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சொல்லி பொதுமக்கள் தெருவுக்கு வந்து போராட தொடங்கி விடுவார்களோ என அஞ்சி அவர்களின் கோபக் கனலில் இருந்து தப்பித்துக் கொள்ளும் உத்தியாக (Escapism) தங்களின் இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம் நடத்தப்பட்டு இருக்கின்றதே தவிர, வேறு எதற்குமல்ல!
எனினும், உரிய விளக்கங்களை விரைவில் விரிவாகக் கூறுகிறேன்.
இவ்வாறு எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.