தமிழக செய்திகள்

வெள்ளை அறிக்கை விவகாரம்: த.வெ.க. அரசுக்கு சவால் விட்ட தங்கம் தென்னரசு

மத்திய அரசு தரவேண்டிய நிதிகள் குறித்து வெள்ளை அறிக்கையில் பேசாதது ஏன்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* தமிழக வெற்றிக்கழக அரசின் இயலாமையை மூடிமறைக்கும் யுக்தியாக வெள்ளை அறிக்கை உள்ளது.

* வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்து தப்பிப்பதற்காக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

* 15 ஆண்டுகளை எடுத்துக்கொண்டு 2021-ல் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.

* 5 ஆண்டுகளை மட்டும் எடுத்துக்கொண்டு தமிழக வெற்றிக்கழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டது ஏன்?

* முந்தைய ஆட்சிகள் பற்றி வெள்ளை அறிக்கையில் இல்லாதது யாரை காப்பாற்ற முயற்சி?

* என்ன சொல்லி தப்பித்து கொள்வது என்பது தான் வெள்ளை அறிக்கையின் நோக்கம்.

* நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கை என்பது வெற்று அறிக்கை.

* சட்டமன்றத்தில் விளக்கம் அளித்த பின்னரும் அதே பல்லவியை பாடியிருக்கிறது வெள்ளை அறிக்கை.

* புதிய திட்டங்களை தற்போதைய சூழலில் இல்லை என தமிழக வெற்றிக்கழக அரசு வெள்ளை அறிக்கையில் கூறுகிறது.

* கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என எடுத்த எடுப்பிலேயே த.வெ.க. கூறுகிறது.

* ஆளுநர் உரையில் புதிய திட்டங்களை சொல்வதற்கு வாய்ப்பில்லை என்கிறது த.வெ.க.

* தமிழகத்தின் கடன் இரண்டு மடங்காக முந்தைய ஆட்சிகளிலும் உயர்ந்துள்ளது.

* தொடர்ச்சியாக அனைத்து ஆட்சிகளிலும் கடன் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

* த.வெ.க. 5 ஆண்டுகள் ஆட்சியை முடித்தால் தமிழகத்தின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக இருக்கும்.

* நாங்கள் வாங்கிய கடனை விட த.வெ.க. குறைவாக வாங்கினால் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன்.

* குஜராத்தில் மக்கள் நலத்திட்டங்கள் என்று எதுவும் கிடையாது.

* தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்கள் பல செயல்படுத்தப்படுகின்றன.

* சிங்கப்பெண் திட்டத்திற்கான நிதி மூலதன செலவில்தான் வருகிறதா?

* திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறுத்துவதற்கு பணி நடக்கிறது. மூலதன செலவில் நடைபெறும் திட்டங்களை நிறுத்தி வருகிறது த.வெ.க. அரசு.

* மத்திய அரசு தரவேண்டிய நிதிகள் குறித்து வெள்ளை அறிக்கையில் பேசாதது ஏன்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.