தமிழக செய்திகள்

தடபெரும்பாக்கம் அருகே விபத்தில் வாலிபர் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே மோகித் பரிதாபமாக இறந்தார்.

செங்குன்றம் போக்குவரத்து போலீசார் உடலை மீட்டு விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

பொன்னேரி, சிவன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் பொன்னேரி பஜாரில் நகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன் மோகித் (வயது21). நேற்று இரவு மோகித் தனது நண்பர்களுடன் பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் அருகே தனியார் விளையாட்டு திடலில் பேட்மிட்டன் விளையாடி விட்டு இரவு 12 மணி அளவில் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

போலீசார் விசாரணை

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே மோகித் பரிதாபமாக இறந்தார். செங்குன்றம் போக்குவரத்து போலீசார் உடலை மீட்டு விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT