தமிழக செய்திகள்

சேகர்பாபு- த.வெ.க. வேட்பாளர் சினோரா அசோக் இடையே கடும் வாக்குவாதம்: துறைமுகம் தொகுதியில் பரபரப்பு

சேகர்பாபு மற்றும் தவெக வேட்பாளர் நேருக்குநேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் துறைமுக தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் சேகர்பாபு போட்டியிடுகிறார். த.வெ.க. சார்பில் சினோரா அசோக் போட்டியிடுகிறார். இன்று மாலை வாக்குப்பதிவு முடிவடையும் நிலையில், இத்தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடி அருகே திமுக தொண்டர்கள் சேகர்பாவு உடன் திரண்டனர். இதனை கேள்விப்பட்ட தவெக தொண்டர்கள் மற்றும் அக்கட்சி வேட்பாளர் சினோரா அசோக் திரண்டனர்.

அவர்கள் அதிகாரிகளிடம் இவர்களை உடனடியாக இந்த இடத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். அவர்கள் பூத்தை கைப்பற்ற வந்துள்ளனர் எனக் குற்றம்சாட்டினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது சேகர்பாபு- சினோரா அசோக் இடையே கைகலப்பு ஏற்படும் வகையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. போலீசார் இருதரப்பினரையும் விலக்கி சமரசம் செய்ய முயற்சி செய்தனர்.